COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, June 7, 2020

Playing God in Life The Small Example | கடவுளின் திருவிளையாடல்

நாம ஒன்னு நினைச்சா....?????
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!
கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!
உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
ஆனால்.... அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.
சரி.... விடு....
கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,
சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
பின் கூப்பிடு பிள்ளையாரை....
வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலேயே....
கிரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்.. நான்..
நானா..???? இல்லங்க.. சார்.. ???
சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து....
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..
அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன்..
அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான கிரேட் மேன்.. என்றார்....
டமார்னு ஒரு சத்தம்....
(வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு ...!!!




tags,
fun comedy, god is great, power of god, life is a round,

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews