COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Friday, June 19, 2020

Kantha Kannalagi kavithai In tamil | Un Priyangalukaga | Anbukkaga


காத்திருக்கிறேன்
      நீ
கடந்து செல்லும்
ஓர் நொடியை

பூத்திருக்கிறேன்
         நீ
இதழ் சிந்தும்
குறுநகையை

மயங்குகிறேன்
      நீ
உதிர்த்து செல்லும்
செம்மொழியை

ரசிகையாகிறேன்
      நீ
ரசித்துச் செல்லும்
ரசனைகாட்சிகளை

அவதானிக்கறேன்
      நீ
அள்ளித் தெறிக்கும்
அழகியலை

நேசிக்கிறேன்
       நீ
விட்டுச் சென்ற
நினைவுகளை

தவிக்கிறேன்
   நீ
தந்த மனச்
சிடுக்குகளை

தேடிக் கொண்டிருப்பேன்
 நீ
எனைத்  தேடிவரும்
நாள் எதுவென்று

மௌனமாகிறேன்
 நீ
கைவிட்டுச் சென்ற
கணங்களை

ஏமாற்றிக் கொள்கிறேன்
  நீ
முப்பொழுதும் நினைவலையில்
முகிழ்கிப்பாய் எனை என்று

உழல்கிறேன்
ஒர் வார்த்தை உமிழ்ந்துவிடு
உன்னில் நானென்று.

கதறியழுகிறேன்
நின் சூல் நிறைந்த
ப்ரியங்களுக்காக.......

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews