COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, June 7, 2020

Murugan Songs | Murugan Temple

Thiruchendur Murugan and Pazhani Murugan Temple

எதிர்மறை எண்ணங்கள் என்னுள்
தோன்றாது ஏற்படும் துன்பங்கள்
ஏணியென எண்ண வைப்பாய்
கதிரொளி வீசினால் காரிருள்
விலகுமே கஷ்டங்கள் கதிரொளி
கருதிடும் மனம் தருவாய்
நதிநீர் ஓட்டங்கள் நன்மையும் 
தீமையும் நடப்பவை ஏற்றிடும்
நல்மனம் நாளும் அருளுவாய்
விதியென எண்ணி விரக்தியை
விதைத்து வெம்மிடும் துர்மனத்தை விரைந்து சிதைய செய்குவாய்
புதிரென புரியாதுன் போற்றிடும்
பேரருளை புரிந்திடும் வகையினில்
புதுமனம் தோன்றிட புகலுவாய்
கதியென கந்தனின் காலடி தொழுதபின் கஷ்டங்கள் வருமெனில் கசப்பெனும் மருந்தென கருதும்மனம் ஈகுவாய்!!!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews