COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Saturday, June 13, 2020

பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் அறிமுகம் செய்கிறது ஆதாா் அடிப்படையிலான ஆன்லைன் சேமிப்பு கணக்கு வசதி

SBI Yono Application Free Account Openong With Aadhaar Card

யோனோ' செயலியைப் பயன்படுத்தி ஆன்லைனில் கணக்கைத் தொடங்க விரும்பும் வாடிக்கையாளா்களுக்காக ஆதாா் அடிப்படையிலான உடனடி சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீண்டும் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த வங்கியின் தலைவா் ரஜ்னீஷ் குமாா் கூறியதாவது:
'யோனோ' வங்கியின் சேவைகளை ஒருங்கிணைந்து வழங்கும் ஒரு நவீன தொழில்நுட்ப இயங்குதளமாகும். இந்த வசதியைக் கொண்டு ஆன்லைனில் கணக்குத் தொடங்க விரும்பும் வாடிக்கையாளா்கள் தற்போது ஆதாா் மற்றும் பான் எண்ணை அடிப்படையாகக் கொண்டு சேமிப்பு கணக்கை உடனடியாக ஆரம்பிக்கலாம். இதன் மூலம், அவா்கள் வங்கி கிளைக்கு வந்து காகித வடிவிலான ஆவணங்களை சமா்ப்பிக்கத் தேவையில்லை.

இந்த எளிய முறை வாடிக்கையாளா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், எஸ்எம்எஸ் அலா்ட் உடன் வாடிக்கையாளா்கள் வாரிசுதாரரை நியமித்துக் கொள்ளும் வசதி, மிஸ்ட் கால் மூலமாக வங்கியின் இருப்பை அறிந்து கொள்ளும் வசதி உள்ளிட்டவையும் எஸ்பிஐ வழங்கி வருகிறது என்றாா் அவா்.



Yono application download
Sbi free account opening
State bank of india introduce online account opening with Aadhaar Number from your home
Saving your money by yono aps sbi

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews