COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, July 23, 2012

என்னவ(ன்)ள் நினைவுகளுடன்!!

Baby - Kavithai


உன் தேகம் தான் என்னருகில்
இல்லை
ஆனால் நீ இருக்கிறாய்
உன் நினைவுகள்
என்னோடே வாழ்கிறது....

உன் சுவாசம்-என்
தேகம்பட்டு
சிலிர்த்த நாட்களின் நினைவுகள்

உன் காலடி பட்ட
மணற்றரை
அதன் பொடியளவு மணல்
என் அறையில்
இரத்தின கற்களாய் ஒளிர்கிறது.....

உன் கண்கள் வீசிய கதற்
கதிரலைகள்
இப்போது என் தேகம்
முழுவதும் அலங்கரித்து
காதலாய் எழுகிறேன்....

உன் அலைபேசி குறுந்தகவல்
இன்று வருவதில்லை
சேமிப்பு பெட்டியில் சேமித்த
செய்திகளை
புரட்டி புரட்டி பார்ப்பதில்
தான் என் பொழுது
போகிறது.....

நீ கொடுத்த காதற்
கடிதங்கள்
மொத்தமாய் பாடமாகிவிட்டது
உன் எழுத்து பிளைகளையும்
இருந்தவாறு எழுத்து பிளையின்றி
எழுதுகிறேன்.....

நீ தந்த காதல் மடல்கள்
அலங்காரமாய்
என் கண்ணாடி அலுமாரியில்....

சின்ன சின்னதாய்
சில சில
காதல் நினைவூட்டும் பரிசுப்பொருட்கள்
எப்பொழுதும் என்னருகிலே
உன் நினைவே கூட்டுகிறது....

நீ கொடுத்த மணிப்புறா
ஜோடி சிலை
அன்று சொன்னாய்
மணிப்புறா ஜோடியில் ஒன்று
இறந்தாலும் மற்றதும் இறந்துவிடும்
என்று
அதை ஏற்கவில்லை நான்
நீ இன்றும் உயிர்
வாழ்கிறாய்!

உன்னோடே இரவு பகல்
எல்லாம் உறவாடுகிறேன்

உன் நினைவுகளுடனே
பேசுகிறேன்
அழுகிறேன்
சிரிக்கிறேன்
கொஞ்சுகிறேன்
படுகிறேன்
ஆடுகிறேன்

நீ என்றும் என்
இதயத்தில் இறக்கவில்லை

உன் நினைவுகளுடனே
உயிர் வாழ்கிறேன்
உயிரே! உயிரே!



1 comment:

  1. kanavu enbathu kaalaivarai............
    un ninaivu enbathu en kallarai...........

    ReplyDelete

Search This Blog

Popular Posts

Total Pageviews