COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, August 7, 2012

Amma and ME Kavithai

கவிதைகள் - Amma Special Latest Kavithai  :
அம்மாவுக்கும் எனக்கும் கவிதைகள்
அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?

கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?

சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?

சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?

ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?

ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?

ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா??

அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்

அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews