Future India :
அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!
ஒலிப்பெருக்கியின்
ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!
அலறும் சப்தத்துடன்
உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!
ஒலிப் புலனை
ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!
அம்மாவிடம் கொடு என;
அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!
முடிந்தது என் வேலை என்று;
அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!
மீண்டும் திருப்பினாள் எனை;
அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!
வாசலுக்கு விரையும்
வருங்கால இந்தியா
நான்!
By...
அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!
ஒலிப்பெருக்கியின்
ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!
அலறும் சப்தத்துடன்
உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!
ஒலிப் புலனை
ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!
அம்மாவிடம் கொடு என;
அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!
முடிந்தது என் வேலை என்று;
அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!
மீண்டும் திருப்பினாள் எனை;
அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!
வாசலுக்கு விரையும்
வருங்கால இந்தியா
நான்!
By...
good
ReplyDelete