WTO | India's Investment Rules :
உலக வல்லரசு நாடுகளே கொரோனாவிற்கு பயந்து என்ன முடங்கி போயுள்ள நாடுகளுக்கு மத்தியில், சீனா மட்டும் தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
China athibar and India PM |
இதற்கிடையில் சீனாவின் பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் படிப்படியாக தங்களது முதலீடுகளை இந்தியாவில் அதிகரித்து வருகிறன்றன.
அதிலும் இந்த கொரோனா ரணகளத்திலும் கூட சீனாவின் மக்கள் வங்கி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடு
இப்படி நாடே கொரோனா ரணகளத்தில் சிக்கித் தவித்து வந்தாலும், சீனா சத்தமேயில்லாமல் முதலீடுகளை அதிகரித்து வருகிறது எனலாம். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் சீனா நிறுவனங்கள், சீனாவின் மக்கள் வங்கி என பலரும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அரசு FDI விதிகளில் சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளை விதித்தது.
முதலீடு குறையும்
அதன் படி அன்னிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment) கட்டுப்பாடுகாளில் புதிய முதலீடுகள் வரத்து ஆனாது குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிண்றனர். மேலும் சீனா மட்டும் அல்ல மற்ற நாடுகளில் இருந்தும் முதலீடுகள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இனி முதலீடு செய்யப்படும் போது அரசின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதால், இது சற்று குறையவே வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
மத்திய அரசு திருத்தம்
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
முதலீடுகளை சமமாக நடத்த வேண்டும்
ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் எல்லா நாடுகளில் இருந்தும் இந்தியா முதலீடுகளை சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment