COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Tuesday, April 21, 2020

இந்தியா : துரத்தும் சீன நிறுவனங்கள்

China invest crores of crores in India :

இந்திய அரசு சீன முதலீடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்து வரும் இந்தக் குழப்பமான நிலையிலும், சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், தொழிற்சாலையை அமைக்கவும் விடாப்பிடியாக பணியாற்றி வருகிறது.
அடுத்த 2 முதல் 3 வருடத்தில் இந்திய சந்தையில் சுமார் 5 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்யச் சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாராக உள்ளது.

எம்ஜி மோட்டார்ஸ்
எம்ஜி மோட்டார்ஸ் பிரிட்டன் பிராண்டாக இருந்தாலும் தற்போது ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் கட்டுப்பாடில் தான் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் அதிகளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.
கிரேட் வால் மோட்டார்ஸ்
இந்திய மக்கள் மத்தியில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்துக் கிரேட் வால் மோட்டார்ஸ், சான்கான் மற்றும் செர்ரி ஆகிய சீன நிறுவனங்களும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிறுவ ஆயத்தமாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் சீனாவில் கார் விற்பனை குறைந்துவிட்ட நிலையில் சீன நிறுவனங்கள் தனது வர்த்தக விரிவாக்கத்திற்கான வெளிநாட்டுச் சந்தைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
முதலீடுகள்
எம்ஜி மோட்டார்ஸ் தனது இந்திய வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல 5000 கோடி ரூபாயும், கிரேட் வால் மோட்டார்ஸ் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகாமான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்திய ஆட்டோமொபைல்
இந்தியாவில் கார் விற்பனை 5 வருட சரிவில் இருக்கும் நிலையில் சீனா நிறுவனங்களின் வருகை ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இந்திய நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்குமோ என்ற அச்சமும் உள்ளது.

முதலீட்டுப் பிரச்சனை
இந்தியா சீன முதலீடுகளுக்கு எதிர்பார்க்காத வகையில் தடை விதித்திருந்தாலும், சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எவ்விதமான தடுமாற்றமும் இன்றித் தனது பணிகளைச் செய்து வருகிறது.
குறிப்பாகச் சான்கன் நிறுவனம் கூர்கானில் அலுவலகத்தை அமைந்து இந்திய வர்த்தகத்திற்குத் தலைமை அலுவலாகச் செயல்படத் துவங்கியுள்ளது சீன நிர்வாகம். இந்நிறுவனம் தொழிற்சாலை அமைக்க ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய பகுதிகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளது.
இந்நிலையில் அனைத்து சீன நிறுவனங்களும் லாக்டவுன் காலம் முடியக் காத்துக்கொண்டு இருக்கிறது. அதன்பின்பு அதிரடியாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் சீன முதலீட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதால் இதை எப்படிக் கையாளப்போகிறது என்பதும் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.




No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews