COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, July 12, 2020

Tamil Kavithai | காலம் சொல்லும் பதில்

வசந்த காலத்தில்...
நம் சந்திப்புகளை எண்ணி சிலாகித்து கொண்டிருந்தேன்,
உன்னை பின்னால் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பது போலொரு உணர்வுக்காட்சி, வழக்கம் போல என் கண்கள் இமைக்க மறந்து அந்த காதோரம் ஒதுங்கிய ஒற்றை முடியையும், கனகாம்பர பூச்சூடலையும், ரசித்துகொண்டருந்தது.
நீ நினைத்தால் திரும்பி பார்க்கலாம், உன் பெயரை அழைத்தால் கூட நீ கேட்க முடியாது,
ஏனெனில்,
இந்த நிகழ்கால மூர்ச்சையில் நாம் ஒன்றாக பயணித்த பேருந்தின் பின் இருக்கையில் நான்,
முன் இருக்கையில் நீ இருந்த ஞாபகங்கள் மட்டும் ஆனால் நீ இல்லை!!!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews