COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Monday, July 27, 2020

Chinna Padal Varigal | kavithaigal Ungaludan | Kavithaigaltamilil

பவனிவரும் பெண்ணிலவே
அந்த மின்மினி பூச்சிகளும்
உன்னொளியில் மின்னுதடி
உன் வாசம் கண்டதனால்
புது நேசம் பிறந்ததடி
இடையே இல்லாமல் சிறு
கொடிபோலது வளைந்து !!!
தாரகை கூட்டமைப்பாய்
மண்ணிற்கு இறங்கிவந்த
வானுலக தேவதையே
சில்லென்ற தென்றலில்
உன் கூந்தல் இசை மீட்ட
முயலோடு மானும்சேர்ந்து
தன் மதிமறந்தே ரசிக்குதடி !!!
வரண்டநிலம் பூத்துவிட
கானகமும் செழித்துவிட
புல்லாய் பிறந்திடவும்
பெருந்தவம் செய்திடணும்
புன்னகைக்கும் ரோசாவே
தமிழிலுனை கவிபுனைய
வார்த்தைகளும் பஞ்சமடி!!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews