COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Saturday, July 18, 2020

பட்டாசு வரலாறு | Sivakasi Crackers History | பட்டாசு உருவான விதம்

Orgin of Crackers in Tamil

80 ஆண்டுகள்... 8 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் -

பட்டாசு உருவான வரலாறு!

சீனாவில் பிறந்த பட்டாசு!

'பட்டாசு' என்கிற இந்த ஒற்றை வார்த்தையை உதடுகளால் உச்சரிக்கும்போதுகூட பட்டாசாய் வெடிக்கிறது. அப்படிப்பட்ட பட்டாசு, சீனாவின் கண்டுபிடிப்பு எனச் சொல்லப்படுகிறது. அந்த நாட்டில், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) அதிக அளவில் இருந்ததாகவும், அது தவறுதலாக நெருப்பில் படும்போது தீ ஜுவாலை ஏற்பட்டதாகவும், அதை மேம்படுத்தியே சீனர்கள் பட்டாசை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக, சீனாவில் ஒரு தினமே (ஏப்ரல் 18) கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில், மூங்கிலுக்குள் வெடிமருந்தை நிரப்பி பட்டாசு உருவாக்கப்பட்டது. போருக்கு மட்டுமே சீனர்கள் இதைப் பயன்படுத்தினர். இத்தகைய பட்டாசுகளை அறிந்துகொள்ள மற்ற நாடுகளும் ஆர்வம் காட்டின. அரேபிய, ஐரோப்பா நாடுகளும் அதில் வெற்றிபெற்றன. இங்கிருந்து தொடங்கிய பட்டாசின் வளர்ச்சி, 19-ம் நூற்றாண்டில் வேகம் பிடித்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1922-ம் ஆண்டு வரை கொல்கத்தாவில்தான் தீப்பெட்டித் தொழில் நடைபெற்றிருக்கிறது. அந்தச் சமயத்தில், சிவகாசியிலிருந்து பி.ஐயன், ஏ.சண்முகம் போன்றவர்கள் தீப்பெட்டி தொழிலைக் கற்பதற்காக கொல்கத்தா சென்றதாகவும், அங்கேயே 6 ஆண்டுக்காலம் தங்கி தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்புகளைக் கற்றுக்கொண்டதாகவும், பின்னர் 1928-ம் ஆண்டு சிவகாசி திரும்பிய அவர்கள், தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், 1940-ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

சிவகாசி பட்டாசும்... சீனப் பட்டாசும்!

இன்று, உலகில் பட்டாசு வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, 'குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் சிவகாசி. இங்கு, 90 சதவிகித பட்டாசுகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. நாடு முழுமைக்கும் இங்கிருந்தே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும், இந்தப் பகுதி மக்கள் பட்டாசுத் தொழிலைச் சார்ந்திருக்கின்றனர். இங்கு, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கேற்றபடி, சிறிதும் பெரிதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, 850-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் பெற்றவையாகவும், 700-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் இல்லாத ஆலைகளாகவும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டாசு விற்பனையில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துவந்த சிவகாசி நகரம், சமீபகாலமாக 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் முடங்கிவருகிறது. இதற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் சிவகாசி பட்டாசுகளுக்கு சீனப் பட்டாசுகள் வேட்டுவைத்த கதையும் உண்டு.

சிவகாசி பட்டாசு ஆலைகள்

சீனாவில் விலை குறைவான பொட்டாசியம் குளோரைடை மூலப்பொருளாகப் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இது, அதிக சத்தத்துடன் வெடிக்கும் தன்மையுடையது. விலையும் குறைவு. இதனால் மக்கள், சீனப் பட்டாசு பக்கம் சாயத் தொடங்கினர். பொட்டாசியம் குளோரைடைப் பயன்படுத்தி இந்தியாவில் பட்டாசு தயாரிக்கத் தடை உள்ளது. இந்தியாவில் சீனப் பட்டாசு விற்கத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் சட்டவிரோதமாக சீனப் பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டு, பல மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதனால் சிவகாசிப் பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 315 டன் சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், டெல்லியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலும் மும்பையில் 7.2 கோடி ரூபாய் அளவிலும் சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய மார்க்கெட்டில் சீனப் பட்டாசுகள் புழங்கிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது, சிவகாசியின் இந்தியச் சந்தை மதிப்பில் 35 சதவிகிதத்தை சீனப் பட்டாசுகள் பிடித்திருந்ததாகக் கூறப்பட்டது.

சீனப் பட்டாசின் தன்மைகுறித்து அப்போது பேசிய சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் முன்னாள் வேதியியல் துறை துணைத்தலைவர் தனசேகரன், "சீனப் பட்டாசுகளைத் தொடர்ந்து அதிகமாக வெடித்தால், அதிலிருந்து வெளியாகும் புகையினால், முதலில் மூச்சுத் திணறல் ஏற்படும். பிறகு, மயக்கம் ஏற்படும். உதாரணமாக, ஆயிரம் வாலா சீனப் பட்டாசை வெடித்தால், அதிலிருந்து வெளிவரும் கரும்புகை, ஆயிரம் சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து வெளியேற்றும் புகைக்குச் சமம். ஏனென்றால், சீனப் பட்டாசில் இருக்கும் பொட்டாசியம் குளோரைடு அவ்வளவு வீரியம்" என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தியிருந்தார்.

பட்டாசுத் தொழில் நலிவடைய என்ன காரணம்?

இப்படி, சிவகாசி பட்டாசு விற்பனைக்கு சீனப் பட்டாசுகள் வேட்டுவைத்தது ஒருபுறமென்றால், மறுபுறம் டெல்லிக் குழந்தைகள் தாக்கல்செய்த மனுக்களும் பட்டாசுத் தொழிலை நலிவடையச் செய்தன. 

 பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?

சீனப் பட்டாசின் வருகையால் சிறிது நலிவடைந்த பட்டாசுத் தொழில், தற்போது பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கச் சொல்லியிருப்பதால், முழுவதுமாக நலிவடைந்திருக்கிறது என்றே சொல்லலாம். பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தச் சொல்வதற்குக் காரணம், நாட்டில் அதிகரித்துவரும் காற்று மாசுதான். பசுமைப் பட்டாசுகள் என்பது, தற்போது புழக்கத்திலிருக்கும் பட்டாசுகள் அளவுக்கு இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. இவற்றில், வேதிமக் கலவையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால், இதில் வாயு உமிழ்வும் குறைவாகவே இருக்கும். அதன் விளைவாகக் காற்று மாசுபாட்டு அளவும் குறைவாகவே இருக்கும். இதைத் தயாரிக்க, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெடிக்கும்போது சத்தம் வரச் செய்யும் கந்தக அமிலத்தைத் தவிர்த்தாலும்கூட, அதேபோன்ற சத்தம் வரச்செய்யும் திறனோடு இருப்பவை இந்த பசுமைப் பட்டாசுகள். வெடித்தபின் கந்தக அமிலம் வெளியாகி, வளிமண்டலக் காற்றின் தரத்தைப் பாதிக்கும் என்ற பிரச்னை இவற்றால் இருக்காது. இந்த யோசனை முதலில் மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Cousil of Scientific Institute for Research- CSIR) விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களோடு மத்திய மின் வேதிம ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேதிமத் தொழில்நுட்பக் கழகம், மத்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இணைந்து, பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவதற்கு முயன்றார்கள்.பட்டாசு 

பசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்தத் தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து 348 பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்கு, பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமங்கள் CSIR-NEERI இந்த ஆண்டு வழங்கப்பட்டன. அந்த ஆலைகள் மட்டுமே, இந்த ஆண்டுக்கான பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும். அதேநேரத்தில், இந்தத் தீபாவளிக்கு வரும் அனைத்துப் பட்டாசுகளும் பசுமைப் பட்டாசுகள் அல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் 400 வகை பட்டாசுகளில், 25 சதவிகித பட்டாசுகளே பசுமைப் பட்டாசுகளாக மாற்றமடைந்துள்ளன. மற்ற அனைத்தும் வழக்கமான பட்டாசுகள்தாம்.

பட்டாசின் தாக்கத்தைக் குறைப்பது எப்படி?

சூழலியல் ஆர்வலரும் 'வான்வெளியின் புலிகள்' நூல் ஆசிரியருமான பேராசிரியர் தா.முருகவேள், "நச்சுத்தன்மை மற்றும் வேதிப்பொருள்கள் அடங்கிய பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்ப் பலர் ஆய்வுசெய்திருக்கின்றனர். இது, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. இதனால் மூச்சுத்திணறல், கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதன் தாக்கம் அதிகமிருக்கும். தீபாவளி நேரத்தில் மழைப்பொழிவு இருப்பதால், இதன் மாசு விரைவாகக் காற்றில் கலந்துபோகாத தன்மையைக் கொண்டிருக்கிறது.
       படித்து அறிந்தது....


Keywords
China Crackers
Sivakasi saravedi history
#sivakasicrackers #chinacrackers
#sivakasipattasu #chinapattasu
#sivakasi #matchbox #sivakasimatchbox
#kolkata

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews